சென்னையில் ஹெல்மட் கட்டாயமாகுமா?
சென்னை:
சென்னை நகரில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் ஹெல்மட் அணிவதுகட்டாயமாக்கப்படாது. இருப்பினும் அதை அணிய வேண்டியதன் அவசியம் குறித்து தீவிரமானபிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகர போக்குவத்துக் காவல்துறை இணைஆணையர் உமா கணபதி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
சென்னை நகரில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்படும்என்று செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து உமா கணபதி சாஸ்திரி வெளியிட்டுள்ளஅறிக்கையில், இந்த செய்தி தவறானது என்று மறுத்துள்ளார்.
மேலும், ஹெல்மட் அணிவதை கட்டாயப்படுத்தும் முடிவு ஏதும் இல்லை.
ஹெல்மட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தீவிர விழிப்புணர்வுப் பிரசாரம்மேற்கொள்ளப்படும்.
பெரும்பாலான சாலை விபத்துக்களில் தலையில் அடிபடுவதால்தான் இறப்புகள் அதிகம் நேருகிறதுஎன்பதால் ஹெல்மட் அணிவதால் உயிரிழப்பைக் காக்க முடியும் என்பதை பொது மக்களுக்குஉணர்த்தும் வகையில், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


