சாயக் கழிவிலிருந்த விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாயப் பட்டறைக் கழிவிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி 3தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி நகரில் ஒரு சாயப்பட்டறை உள்ளது. இங்கு வெளியாகும் சாயக்கழிவுகளை 10 அடி ஆழ கிணற்றில் தேக்கி வைப்பது வழக்கம். மாதந்தோறும் இந்த கழிவுகள் சுத்தப்படுத்தப்பட்டுஅகற்றப்படும்.
அதுபோல நேற்று கிணற்றை சுத்தப்படுத்துவதற்காக நாகராஜன் என்ற தொழிலாளர் இறங்கியுள்ளார்.
அப்போது அந்தக் கழிவில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கி அவர் பரிதாபமாக இறந்தார். அவரைக்காப்பாற்றுவதற்காக மேலும்2 தொழிலாளர்களும் உள்ளே இறங்கினர். ஆனால் அவர்களும் விஷ வாயு தாக்கிஇறந்தனர்.












Click it and Unblock the Notifications