சட்டசபை செயலாளரின் பதவி காலம் மேலும் நீட்டிப்பு
சென்னை:
தமிழக சட்டசபை செயலாளர் ராஜாராமனின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
58 வயதாகும் ராஜாராமனின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இருப்பினும், முதல்வரின்நல்லெண்ணத்தைப் பெற்றவரான அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் காளிமுத்துவின் ஆலோசனையின் பேரில் ராஜாராமனின் பதவிக்காலத்தைஆகஸ்ட் 1ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஆளுநர் ராம் மோகன் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் 1999ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை சட்டசபை செயலாளர் பதவியைவகித்துள்ளார் ராஜாராமன்.
அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்திலும் அவர் அப்பதவியில் நீடித்தார். பல முறை அவர் அரசுக்கு சாதகமாகநடந்து கொண்டதால், முதல்வரின் நல்லெண்ணத்தைப் பெற்றார். குறிப்பாக பரிதி இளம்வழுதி விவகாரத்தில்முதல்வரின் பாராட்டைப் பெற்றார் ராஜாராமன்.
மயிலாடுதுறையில் சாதாரண பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கிய ராஜாராமன், கடந்த 1967ம் ஆண்டுசட்டசபை செயலகத்தில் கிளர்க்காக தனது சட்டசபை வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


