For Daily Alerts
Just In
நெல்லை நடராஜா வாலிபரின் 48 மணி நேர நான்-ஸ்டாப் நடை!
திருநிெல்வேலி:
மழை நீர் பாதுகாப்பை வலியுறுத்தி திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலைதொடர்ந்து 48 மணி திேரம் திடந்தே சுற்றும் முயற்சியில் ஒரு இளைஞர் ஈடுபட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது. மழை நீர் பாதுகாப்புகுறித்து மக்கள் மனதில் பதிய வைக்கவும், அது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும்முடிவெடுத்தார்.
அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் நெல்லையப்பர் கோவில்.
அதிகம் பேர் வந்து போகும் இடமான நெல்லையப்பர் கோவிலை தொடர்ந்து 48 மணி நேரம்நடந்தே சுற்றி வர முடிவு செய்தார் ஹமீது.
இவர் இதுபோல நடப்பது முதல் முறையல்ல. பல்வேறு பொதுப் பிரச்சினைகளுக்காக இதுவரை20,000 கிலோ மீட்டர் வரை நடந்துள்ளார்.
மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுடன் கின்னஸ் சாதனை படைப்பதும் அவரதுலட்சியமாம்.


