நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட அழகிரி- போலீஸ் இடையே மோதல்
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டினன் கொலை வழக்கில் அழகிரிக்கு அடுத்த மாதம் 13ம் தேதி வரை காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவல் நீட்டிப்புக்காக மதுரை நீதிமன்றத்தில் அழகிரியை அழைத்து வந்தபோது, போலீஸாருக்கும் திமுகவழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
வேனிலிருந்து அழகிரி இறங்கியதும் திமுக வழக்கறிஞர்கள் அவரை நெருங்க முயன்றனர். ஆனால், போலீஸார்அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் உளவுப் பிரிவு எஸ்.பியும் போலீசாரும் டி-சர்ட்டில் நின்று கொண்டு திமுகவழக்கறிஞர்களைத் தள்ளினர்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அழகிரி, யார் அவர்கள்? பார்த்தா ரவுடிகள் மாதிரி இருக்காங்க.. இவங்கஇங்கிருந்து போகாட்டி நான் கோர்ட்டுக்குள்ள வர மாட்டேன் என்றார். இதையடுத்து அழகிரியுடன் போலீசார்வாக்குவாதத்தில் இறங்க, திமுக வழக்கறிஞர்கள் சேர்ந்து கத்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சாதாரண உடையில் இருந்த போலீசார் உடனே அந்த இடத்தை விட்டு அகன்றனர். இதன் பின்னரேஅழகிரி நீதிமன்றத்துக்குள் வந்தார்.
போலீஸாரையும் மீறி திமுக வழக்கறிஞர்கள் அழகிரியுடன் சேர்ந்து வந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார்தள்ள பதிலுக்கு வழக்கறிஞர்களும் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு வழியாய் மாஜிஸ்திரேட் வனிதா முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது காவலை ஆகஸ்ட்13 வரை நீடிப்பதாக வனிதா அறிவித்தார்.
பின்னர் வெளியே வந்த அழகிரியை மாஜி மதுரை மேயர் குழந்தைவேலு, மாஜி அமைச்சர்பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் சந்தித்துப் பேச முயல, அதை போலீசார் தடுக்க, முத்துராலிங்கத்துக்கும்போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
தம்பி, ஏன் இப்படி நடந்துக்கிறீங்க.. என்று பொன் முத்துராமலிங்கம் கேட்க, பதிலே சொல்லாமல் அழகிரியைஅவரிடம் இருந்து தள்ளிக் கொண்டு வேனில் ஏற்றினர் போலீசார். அங்கு கூடியிருந்த திமுகவினரை நோக்கிஅழகிரி கையை அசைக்க, உடனே அந்த இடத்தில் இருந்து வேனைக் கிளப்பினர் போலீசார்.
அழகிரி ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி அரசின் சிறப்பு வழக்கறிஞர் கந்தசாமியும் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications