ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் பரமஹம்ஸ் மரணம்

Subscribe to Oneindia Tamil

அயோத்தி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர்ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 92.

நீண்ட நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த இரு மாதங்களில் 3 முறை மாரடைப்புஏற்பட்டது. இதையடுத்து சிறப்பு ஹெலிகாப்டரில் லக்னெளவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனாலும் தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் உடல் நலம் தேறவில்லை.

இதையடுத்து தன்னை அயோத்திக்கே கொண்டு செல்லுமாறு அவர் கோரினார். இதைத் தொடர்ந்து கடந்தசெவ்வாய்க்கிழமை அவர் அயோத்திக்கே கொண்டு வரப்பட்டார். இந் நிலையில் இன்று அதிகாலை 4.45 மணிக்குதனது இல்லத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் அவரது இல்லத்தில் குவிந்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்அசோக் சிங்கலும் அங்கு விரைந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

போலீசாருக்கும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் சிலையை நிறுவி, பூஜை நடத்தியேதீருவேன் என்று இவர் புறப்பட்டார், இதையடுத்து நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் மத்தியஅரசு கெஞ்சிக் கேட்டுக் கொண்டதையடுத்து சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் பூஜைகள் நடத்தினார்.

அப்போது பிரதமர் வாஜ்பாய் இவருடன் தொலைபேசியில் பேச முயன்றும் இவர் பேச மறுத்துவிட்டார்.

கோவில் கட்ட அனுமதிக்காவிட்டால் விஷம் குடிப்பேன் என்று மத்திய அரசை மிரட்டினார். இதைடுத்து மத்தியஅரசு தனது பிரதிநிதியை அனுப்பி அவரிடம் இருந்து கோவில் கட்டுவதற்கான கல்லைப் பெற்றுக் கொண்டது.

அப்போது, இவரிடம் மத்திய அரசு மண்டியிடுவதாகவும், இவரைப் பிடித்து உள்ளே போட வேண்டும் என்றும்ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். மேலும் பிகாருக்குள் வந்தால் அவரைக் கைதுசெய்வோம் என்றும் அறிவித்திருந்தார்.

அயோத்தி விவகாரத்தில் யாருக்கு அதிக உரிமை உண்டு என்பதில் விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். ஆகியதலைவர்களுடன் அவ்வப்போது பரமஹம்ஸ் மோதியதும் உண்டு. தீவிரமான சமஸ்கிருத பண்டிதர் இவர்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் இருந்ததா என்பது குறித்து தோண்டிப்பார்க்க நீதிமன்றம் உத்தரவிட்டபோது அதை இவர் எதிர்த்தார். சாஸ்திரங்கள், வேதங்களில் கூறியுள்ளபடி இங்குகோவில் இருந்தது. இதனால் இங்கு மீண்டும் கோவிலைக் கட்ட வேண்டும் என்று கூறி வந்தார்.

அயோத்தியைப் போல காசி, மதுராவிலும் மசூதிகள் உள்ள இடங்களை முஸ்லீம்கள் இந்துக்களிடம் வழங்கவேண்டும் என்று கூறி வந்தார். இவரது உடல் தகனம் நாளை நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர்அத்வானியும் பங்கேற்பார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+