For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜீவஜோதியை 9 முறை சந்தித்து பணம் தந்தேன்: அண்ணாச்சி ராஜகோபால் தகவல்

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டனம்:

Jeevajothiசமீப காலங்களில் ஜீவஜோதியை ஒன்பது முறை நேரில் சந்தித்துள்ளதாகவும், அவருக்கு ஏராளமான பணத்தைத்தந்துள்ளதாகவும் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் கூறியுள்ளார்.

தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை, ராஜகோபால் கூலிகளை வைத்துக் கடத்திக் கொன்றதில் இருந்து அவருடன்எந்தத் தொடர்பும் தனக்கு இல்லை என ஜீவஜோதி கூறி வருகிறார். ஆனால், அவருடன் ராஜகோபாலுக்கு தொடர்புநீடித்து வந்துள்ளது உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள ஜீவஜோதியின் மாமா வீட்டுக்குச் சென்று அவரை கடத்தமுயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜகோபால்.

ஆனால், அடிக்கடி இவ்வாறு ஜீவஜோதியை இந்த வீட்டில் வைத்து ராஜகோபால் சந்தித்துள்ளதாகவும்,அப்போதெல்லாம் ஜீவஜோதியின் மாமா பணம் கேட்டு தொல்லைப் படுத்தியதாகவும், கடந்த முறை பணவிஷயமாக தகராறு ஏற்பட்டுவிடவே ராஜகோபால் கடத்த வந்ததாகக் கூறி ஜீவஜோதியின் மாமாவே அவரைமாட்டிவிட்டதாகத் தெரிகிறது.

ஜீவஜோதிக்கு செல்போன் உள்பட சகலமும் வாங்கித் தந்த ராஜகோபால் தினமும் சென்னையில் இருந்து அவருடன்தினமும் பேசியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், ராஜகோபாலுடனான தனது உறவு மீண்டும்அம்பலமாகிவிட்டதால் ஜீவஜோதியும் பல்டி அடித்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து தான் அவரைவிமர்சித்துப் பேசி வருகிறார் ஜீவஜோதி என்கிறார்கள்.

இந் நிலையில் ஜீவஜோதிக்கும் தனக்கும் இடையே இருந்த உறவை வெளிப்படுத்த ராஜகோபாலும் முடிவுசெய்துவிட்டார்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள ராஜகோபாலை, நேற்று மாலை காவல் நீட்டிப்புக்காக பலத்த பாதுகாப்புடன்திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். மாஜிஸ்திரேட் கவுதமன் முன்னிலையில்ராஜகோபாலை, மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அப்போது ராஜகோபால் நிபர்களிடம் கூறுகையில்,

என்னால் 4,000 குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. 3,000 குழந்தைகளுக்கு நான் படிக்க உதவிகளை வழங்கிவருகின்றேன். எனது தொழில் போட்டி காரணமாக சிலர் இவ்வழக்கை பெரிதாக்கி வருகின்றனர். பிரச்னை குறித்துநான் வெளயே வந்த பின்னர் பல தகவல்கள் கூறுவேன். ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ளும் உத்தேசம்ஏதுமில்லை.

நாகையில் உள்ள எனக்கு வேண்டியவர் வீட்டில் வைத்து இதுவரை ஒன்பது முறை ஜீவஜோதியை சந்தித்துள்ளேன்.

அப்போது அவருக்கு பணமும் கொடுத்துள்ளேன் என்றார்.

இந் நிலையில் தன் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும் என்றும்ராஜகோபால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X