சிறையில் ஒரு ஆண்டைக் கடந்த பழ.நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைத் தொடர்ந்து பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இன்றுடன் சிறையில் ஒரு வருடத்தை முடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே நாளில்தான் பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில்அடைக்கப்பட்டார். சிறை வாசம் அனுபவித்து வரும் அவர் இன்று இன்னொரு வழக்கில் சென்னை ஆலந்தூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

காவியத் தலைவன் கிட்டு என்ற அவர் எழுதிய புத்தகம் கடந்த 1994ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில்பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பாக இன்று அவர் கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெகந்நாதன் உத்தரவிட்டார். இதன்பின்னர் நெடுமாறன் மீண்டும் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+