ஊட்டியில் கடும் குடிநீர்ப் பஞ்சம் .. கவுன்சிலர்கள் சாலை மறியல்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
நீலகிரி மாவட்டத் தலைநகரான ஊட்டியில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. நகராட்சி நிர்வாகம் துரித கதியில்நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவுவதாக பல்வேறு வார்டுகளின் கவுன்சிலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார்தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இன்று 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
பின்னர் நகராட்சி ஆணையர் விரைந்து வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி கலையச் செய்தார்.












Click it and Unblock the Notifications