வாஜ்பாயின் பேச்சு சந்தேகத்தை கிளப்புகிறது: கருணாநிதி
சென்னை :
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேசிய செயல் திட்டத்திற்கும், அயோத்தியில் பிரதமர் வாஜ்பாய்பேசியுள்ள பேச்சுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. வாஜ்பாயின் பேச்சு பல்வேறுசந்தேகங்களை கிளப்புகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ் இறுதி அஞ்சலிநிகழ்ச்சியில் நேற்று பேசிய வாஜ்பாய், அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டப்படும். கோவில்கட்டுவதை எதிர்த்து வரும் கட்சியினருக்கும் விரைவில் நல்ல புத்தி வரும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
1949ம் ஆண்டு ஒரு நாள் இரவு, மறைந்த ராமச்சந்திர பரமஹம்சும், இன்னும் சிலரும் சேர்ந்துஅயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் சிலையை வைத்து விட்டு வந்து விட்டனர்.
இதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல்,உ.பி. மாநில முதல்வர் கோவிந்த் வல்லப பந்த் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சிலையை அங்கிருந்து அகற்றவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதேபோல, 1992ம் ஆண்டு கரசேவை என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டது.மேலும் பாபர் மசூதியும் இடித்துத் தள்ளப்பட்டது. அந்த சமயங்களில் திமுக கடும் கண்டனம்தெரிவித்து கண்டனக் கூட்டங்களையும் நடத்தியது.
பின்னர் பிரதமர் ஆனவுடன் நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் பேசுகையில், சிறுபான்மை மக்களின்உணர்வுகள் மதிக்கப்படும், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்திலும் ராமர் கோவில் தொடர்பாக எதுவும்கூறப்படவில்லை.
இந் நிலையில், மறைந்த பரமஹம்சின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போன பிரதமர் வாஜ்பாய்,அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறியுள்ளார். இது பல்வேறு சந்தேகங்களைக்கிளப்புகிறது.
நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட உறுதிமொழிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டத்திற்கும், வாஜ்பாய் பேச்சிற்கும் இடையே மாறுபாடுகள் உள்ளதோ என்ற ஐயம்ஏற்பட்டுள்ளது.
இதை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications