சட்டை கிழிப்பு, வேஷ்டி அவிழ்ப்பு, கைகலப்பு ..
சென்னை:
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இரண்டாவது நாளாகமீண்டும் அடிதடி நடந்தது.
வாசன் கோஷ்டியைச் சேர்ந்த சிலர் உண்ணா விரதப் போராட்டம் நடத்த பதிலுக்கு இளங்கோவன் கோஷ்டியினர்உண்ணும் விரதத்தில் இறங்கி வாழைப் பழம், முட்டை பிரியாணி சாப்பிட, பெரும் மோதல் ஏற்பட்டது.
சத்தியமூர்த்தி பவனே போர்க்களம் போல காணப்பட்டது. அவிழ்ந்த வேஷ்டிகள், கிழந்த சட்டைகளுடன் பலதொண்டர்கள் வெளியேறினர்.
காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் வண்ணாரப்பேட்டையில் உடற் பயிற்சி கூடம் தொடங்கப்பட்டது.இளங்கோவன் கோஷ்டியினர் இதனைத் தொடங்கியுள்ளனர். இதன் திறப்பு விழாவுக்கு வட சென்னை மாவட்டஇளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லப்பா அழைக்கப்படவில்லை. காரணம், அவர் வாசன் கோஷ்டிக்காரர்.
விழாவுக்கு தன்னை அழைக்காதது ஏன் என்று கேட்டு சத்தியமூர்த்தி பவனில் இருந்த நிர்வாகிகளிடம்கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்லப்பாவின் சட்டையைக் கிழித்து அனுப்பினர்இளங்கோவனின் ஆதரவாளர்கள்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது ஆதரவாளர்களோடு சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் தனதுஆட்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். வாயில் கருப்புத் துணியைக் கட்டியபடி உண்ணாவிரதம் இருந்தஅவர்களுக்குப் போட்டியாக இளங்கோவன் கோஷ்டியினர் உண்ணும் விரதம் மேற்கொண்டனர்.
பெரிய பெரிய வாழைத்தார்களுடன் அமர்ந்த அவர்கள் வாழைப் பழத்தை சாப்பிட்டவாறும், உண்ணாவிரதம் இருந்தவர்களை நக்கலடித்துக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள்.
இதையறிந்த கட்சி நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அப்போது இருதரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சிலரது சட்டைகள் கிழிக்கப்பட்டன, வேஷ்டிகள்அவிழ்க்கப்பட்டன, சிலர் தாக்குதலுக்கும் ஆளானார்கள். மொத்தத்தில் பெரிய மோதலே நடைபெற்றது.
காங்கிரஸாரின் இந்த கோஷ்டி மோதலை சாலையில் சென்ற பொதுமக்களும் கூடி நின்று வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றனர். பின்னர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மெயப்பன் வந்து அனைவரையும் கலைந்துபோகுமாறு செய்தார். பின்னர் மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications