"தங்க"த் தமிழர்களுக்கு உதவுகிறார் ஜெ.
சென்னை:
கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்த 4000 தமிழர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யமுதல்வர் ஜெயலலிதா முன்வந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கம் தற்போது மூடப்பட்டு விட்டது. இதனால்4000க்கும் மேற்பட்ட தமிழர் குடும்பங்கள் வேலையின்றி பட்டினியில் வாடி வருகின்றனர்.
இவர்களது நிலை குறித்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின்பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு உதவ ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழர் குடும்பத்திற்கும் தலா 30 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இந்த உதவியை,தொழில்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ராஜரத்தினம் ஆகியோர் வருகிற 6ம் தேதிகோலாருக்குச் சென்று நேரடியாக வழங்குகிறார்கள்.
கோலார் தங்கச் சுரங்கம் கடந்த 2001ம் ஆண்டு நஷ்டம் காரணமாக மூடப்பட்டது. இதில் வேலை பார்த்து வந்த6000 பேரில் முக்கால்வாசிப் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையிழந்த தமிழர்கள் வேலைக்காக தற்போது அலைந்து கொண்டிருக்கிறார்கள். பலர் பெங்களூர் வந்துவேலைக்கு முயற்சி செய்கின்றனர். ஆனாலும் கிடைத்தபாடில்லை.
இவர்களுக்காக கர்நாடக அரசும் கை கொடுக்கவில்லை. மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. தற்போதுஅதிமுக சார்பில் கோலார் தமிழர்களுக்கு ஜெயலலிதா உதவி செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications