எஸ்மா சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
சென்னை:
அத்தியாவசியப் பணிகள் பராமப்புச் சட்டம் எஸ்மா, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத்தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து எஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து திருத்தப்பட்ட புதிய டெஸ்மா சட்டம்பிரயோகிக்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, வேலைநிறுத்தம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்,லட்சக்கணக்கானோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் உள்ளது. இன்று மாலை அதில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், எஸ்மா சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிக்கையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான வழக்கில் இன்று இறுதித்தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்று காலை தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதில், எத்தனை பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு மீண்டும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதுஎன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் 5000 பேரைத் தவிர மற்ற அனைவருக்கும்மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications