டவுன் பஞ்சாயத்துக்களை கலைக்க அரசு திடீர் முடிவு
சென்னை:
கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக டவுன் பஞ்சாயத்துக்களைக் கலைத்து விட தமிழக அரசுமுடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவி வருவதாக அடிக்கடி தமிழக அரசு கூறி வருகிறது.அதைக் காரணம் காட்டியே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள்பறிக்கப்பட்டன.
இந்த நிலையில், டவுன் பஞ்சாயத்துக்களின் மீது கை வைக்க அரசு முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது. தமிழகத்தில் தற்போது 611 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவை அனைத்தையும்கலைத்து விட அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, இவற்றில் 44 டவுன் பஞ்சாயத்துக்கள், அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன்இணைக்கப்படும். மீதமுள்ள பஞ்சாயத்துக்கள், அருகாமையில் உள்ள கிராமப்பஞ்சாயத்துக்களுடன் இணைக்கப்படும்.
இந்த கலைப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதிலும், செயல் அதிகாரிகள், பில்கலெக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 14,000 பேருடைய பணி உபரியாக இருக்கும்.
இவர்களை வெவ்வேறு அலுவலகங்களில் சேர்ப்பதா அல்லது விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ்இவர்களை சேர்த்து விடுவதா என்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அது முடிவானவுடன்,கலைப்பு நடவடிக்கை தொடங்கி விடும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications