8,454 பேருக்கு மீண்டும் வேலை: அதிகாரிகள் தீவிர ஆலோசனை
சென்னை:
உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டபடி டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் 6,072 பேர் தவிர மீதமுள்ள 8,454 அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் வேலையில் சேர்ப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ், இன்று பல்வேறு துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை, முதல் தகவல் அறிக்கையை காரணம் காட்டிமீண்டும் பணியில் சேர்க்க தமிழக அரசு மறுத்தது. 5,000 பேரைத் தவிர மற்ற அனைவரையும் மீண்டும் பணியில்சேர்க்க கடந்த 31ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 6,072 பேர் தவிர மற்ற 8,454பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் பிற்பகலில் இந்தக் கூட்டம் தொடங்கியது. இதில் எடுக்கப்படும் முடிவு குறித்துஹைதராபாத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். பின்னர்இன்றிரவே இவர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் உத்தரவும் பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications