தலையில் தேங்காய் உடைக்க அரசு தடை
சென்னை:
தலையில் தேங்காய் உடைப்பது, உடலில் சாட்டையால் அடிப்பது போன்ற செயல்களை கோவில் விழாக்களில்மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கரூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செய்யும் கோவில் விழாவின்போது, 3 பேன்மண்டை உடைந்தது. ரத்தம் வழிய வழிய அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர்பக்தர்கள் மீது பூசாரி சாட்டையால் அடித்து இன்னொரு நேர்த்திக் கடனையும்நிறைவேற்றினர்.
இந்த செயல்கள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம்வலையபட்டி கிராமத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவிலிலும் தலையில் தேங்காய் உடைப்பது, சாட்டையால்அடிப்பது ஆகிய நேர்த்திக் கடன் நிகழ்ச்சிகள் நடக்கப் போவதாக தெரியவந்தது.
இதையடுத்து மதுரை இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட சம்பந்தப்பட்ட கோவில்பூசாரியிடம், இதுபோன்ற செயல்கள் கோவில் விழாவில் ஈடுபடக் கூடாது. மீறி நடந்தால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் தடையை மீறி தேங்காய் உடைப்பும், சாட்டையடியும் நடப்பதாக அற நிலைத்துறை அதிகாரிகளுக்குத்தெரியவந்தது. இதையடுத்து அங்கு காவல்துறையினருடன் விரைந்து சென்ற அதிகாரிகள் இரு நிகழ்ச்சிகளையும்தடுத்து நிறுத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications