மானபங்கப்படுத்தப்பட்ட பெண்ணை பெற்றோருடன் சேர்த்து வைத்த கோர்ட்
சென்னை:
5 ஆட்டோ டிரைவர்களால் மானபங்கப்படுத்தபட்டு, பெற்றோரால் கைவிடப்பட்ட இளம் பெண்ணை, சென்னைமுதன்மை செஷன்ஸ் நீதிபதி ஜெயபால், மீண்டும் அந்தப் பெண்ணின் பெற்றோருடன் சேர்த்து வைத்தார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த அந்த இளம்பெண் கடந்த மார்ச் மாதம் குடும்பப் பிரச்சினைகாரணமாக வீட்டை விட்டு ஓடி வந்தார்.
சென்னைக்கு வந்த அவர் ரயில் நிலையத்தில் வழி தெரியாமல் நின்று கொண்டிருந்தபோது, 5 ஆட்டோ டிரைவர்கள்அவரை அணுகி ஏமாற்றி ஆட்டோவில் கூட்டிச் சென்று கற்பழித்தனர். பின்னர் அவரை விட்டுவிட்டு ஓடி விட்டனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மானபங்கப்படுத்தப்பட்ட பெண் ஆதரவற்றோர்இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அவரது பெற்றோருக்குத் தகவல் தரப்பட்டது. ஆனால் அவரைத் தாங்கள் தலை முழுகிவிட்டதாக பெண்ணின் பெற்றோர் கூறி விட்டனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக ஜூலை 27ம் தேதி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஜெயபால் முன்புஇந்தப் பெண் ஆஜர் செய்யப்பட்டார்.
அப்போது தான் தனது பெற்றோருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னை எப்படியாவது பெற்றோருடன்சேர்த்து வைக்குமாறும் கூறி அந்தப் பெண் கதறி அழுதார். இதைக் கண்ட நீதிபதி அதிர்ச்சியுற்றார்.
இந்தப் பெண்ணின் விவகாரம் தொடர்பாக சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தைச் சேர்ந்த ஒருஉறுப்பினர் உடனடியாக போடிநாயக்கனூர் விரைந்து சென்று அவரது பெற்றோரை சமாதானப்படுத்தி இங்குஅழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கறிஞர் மரியா ஜெயராஜ் போடி சென்று பெண்ணின் தந்தையுடன் பேசினார். நீண்ட நேரசமரசரத்திற்குப் பின்னர் பெண்ணை ஏற்றுக் கொள்ள தந்தை சம்மதித்தார்.
இதைத்தொடர்ந்து சென்னைக்கு வந்த அவருடன், அவரது மகளை அனுப்புமாறு நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications