டாக்டர்களுக்கு ரேட்டிங் கொடுக்கக் கூடாது .. சன் டிவிக்கு கோர்ட் உத்தரவு
சென்னை:
சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சிறந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவமனைகள் குறித்த கருத்துக்கணிப்புநிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனைகளுக்கு ரேட்டிங், தரப்புள்ளிகள் கொடுக்கக் கூடாது என்று சென்னைசிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சன் டிவியில் சமீப காலமாக கருத்துக் கணிப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழகத்திலேயே சிறந்த 5 கல்விநிலையங்கள், பின்னர் சிறந்த 5 ஜவுளிக் கடைகள் என்ற வரிசையில் திங்கள்கிழமை முதல் சிறந்த மருத்துவர்கள்,சிறந்த மருத்துவமனைகள் யார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் சிறந்த டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு தரப்புள்ளிகள், ரேட்டிங் ஆகியவற்றைக் கொடுப்பதைக்கண்டித்து இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் டாக்டர் ரங்கநாதன் சென்னை சிட்டி சிவில்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், மருத்துவ சட்ட நெறிமுறைகளுக்கு புறம்பாக டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு ரேட்டிங் கொடுப்பதுகண்டிக்கத்தக்கது. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து 8-வதுநீதிமன்ற உதவி நீதிபதி முகைதீன் பிச்சை உத்தரவிட்டிருந்தார்.
நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேட்டிங் கொடுக்காமல் இந்த நிகழ்ச்சியைஒளிபரப்புவதில் ஆட்சேபனை இல்லை என்று டாக்டர் ரங்கநாதனின் வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதை ஏற்ற சன் டிவியின் வழக்கறிஞர் வில்சன், சிறந்த டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு ரேட்டிங் கொடுக்கப்படமாட்டாது. மாறாக, தலைசிறந்த என்ற வார்த்தையே பயன்படுத்தப்படும் என்றார்.
பின்னர் இந்த வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி முகைதீன் பிச்சை, ரேட்டிங் கொடுக்கக் கூடாது.அப்படி செய்வதாக இருந்தால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பலாம் என்று கண்டிப்புடன் கூறி வழக்கைஒத்திவைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications