இன்று கூடுகிறது காவிரி கண்காணிப்பு குழு: தமிழ்நாடு-கர்நாடகம் மோதல் நடக்கும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரிக் கண்காணிப்பு குழு இன்று பிற்பகலில் டெல்லியில் கூடுகிறது.

வறட்சி காலத்தில் நீர் பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக நிபுணர் கமிட்டி உருவாக்கியுள்ள புதிய திட்டவரையரைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும். இக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிகாரிகள்இடையே காரசார விவாதம் நடக்கலாம் என்று தெரிகிறது.

கர்நாடக அணைகளுக்கு வரவேண்டிய நீர் வரத்து 50 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், இப்போது தங்களதுஅணைக் கட்டுகளில் 23.7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும் அம் மாநிலம் கூறியுள்ளது. இதனால்தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு எங்களை மத்திய அரசு வற்புறுத்தக் கூடாது என கர்நாடகம் கூறியுள்ளது.

தமிழகத்தை இந்த அறிவிப்பு எரிச்சல்படுத்தியுள்ளது. இருக்கும் நீரை சரி சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் எனதமிழகம் கூறுகிறது.

இன்று நடக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநில தலைமைச் செயலாளர்கள்,பாசனத்துறை, பொதுப்பணித்துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் கோஸ்வாமி தலைமையில் இக் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேஷ் ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டார். அவருடன் மூத்தஅதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

இக் குழு இன்று இரவு சென்னை திரும்பும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+