சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு பாதிச் சம்பளம் கூட கிடைக்காது
சென்னை:
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்கு விதிமுறைப்படி பாதி சம்பளம் கொடுக்கஅரசு விரும்பவில்லை. அவர்களுக்கு தொகப்பூதியம் போல ரூ. 4000 மட்டுமே கொடுக்க அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஊழியர்களில் தற்போது 6032 பேரைத் தவிர மற்ற அனைவரும்பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6032 பேரில் 2769 பேரை சஸ்பெண்ட்செய்யப்பட்டவர்களாக கருதுமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இவர்கள் அனைவரும் சஸ்பெண்ட்செய்யப்பட்டவர்களாக கருதப்படவுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்கு பாதிச் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது.மேலும், வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட சகல சலுகைகளும் பாதியளவில் கிடைக்கும். ஆனால் இவ்வாறு பாதிச்சம்பளம் கொடுக்க தமிழக அரசு விரும்பவில்லை என்று கூறுகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 4000 மட்டுமே மாதந்தோறும் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கணிசமான அளவு அரசுப் பணத்தை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, தலைமைச் செயலக பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும்அரசு ஊழியர்கள் சிலரை தலைமைச் செயலக பணிக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்குத் தேவையானஅரசு உத்தரவு தயாராகி விட்டதாகவும், விரைவில் அது பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மற்ற அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கும், தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் இடையே நிறையவேறுபாடுகள் உள்ளன. எனவே, அதற்கேற்ற வகையில் தலைமைச் செயலக பணி விதிமுறைகளில் திருத்தம்செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் மொத்தம் 5116 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 1978 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர், 580 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள்தற்போது அங்கு பணியில்இல்லை. இதனால் கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்தே, வெளிமாவட்ட ஊழியர்களை தலைச்ை செயலக பணிகளில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications