கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் கதிர் வீச்சு கசிவு: 6 பேர் பாதிப்பு
கல்பாக்கம்:
தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர் வீச்சில் 6 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஜனவரி மாதமே நடந்த இந்த விபத்தை இப்போது தான் அணு மின் நிலையம் வெளியில் தெரிவித்துள்ளது.
| கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சு நிறைந்த ரசாயனக் கலவை (radioactive material)அருகிலேயே தரைக்கடியில் மிக ஆழத்தில் பாதுகாத்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு(radiation) மிக அபாயகரமானது. |
இந்த ரசாயனம் முழு கதிர்வீச்சை இழக்க நூற்றாண்டுகள் ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி ஒரு கண்டெய்னரில் இருந்து இன்னொரு கன்டெய்னருக்கு கதிர்வீச்சு கொண்டரசாயனத்தை மாற்றும்போது அதைக் கொண்டு சென்ற சிலிண்டெரின் வால்வு திறந்து கொண்டதாகத் தெரிகிறது.
இதனால் அதிலிருந்து புறப்பட்ட கதிர்வீச்சால் 6 அணு மின் நிலைய ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால்,அவர்களுக்கு இதுவரை எந்தவிதமான நோயோ அல்லது கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறியோதோன்றவில்லை என பாபா அணு சக்தி நிலையத்தின் இயக்குனர் பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார்.
| இவர் இந்தக் கதிர்வீச்சு விபத்து குறித்து நிருபர்களுக்கு பேட்டியும் தந்தார்.
கதிர்வீச்சின் அளவு குறித்து எச்சரிக்கை செய்யும் கருவிகள் இருந்தும் கூட அதை சரியாக பயன்படுத்தாததுஊழியர்களின் தவறு தான் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் வருடத்திற்கு இவ்வளவு தான் கதிர்வீச்சுக்கு உள்ளாகலாம் என்ற அளவை விட கொஞ்சம் அதிகமானஅளவு கதிர்வீச்சீல் ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்களே தவிர, மற்றபடி அபாயகரமாக ஏதும் நடந்துவிடவில்லைஎன்றார். |
|















Click it and Unblock the Notifications