புலிகள் மீது அமெரிக்கா புகார்: பிரான்சில் எல்.டி.டி.ஈ. முக்கிய ஆலோசனை
வாஷிங்டன்:
அமைதி முயற்சிகளை சீர் குலைக்கும் வகையில் விடுதலைப் புலிகள் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிரவாத்தை புலிகள் முழுமையாகக் கைவிட வேண்டும். அரசியல் எதிரிகளைக் கொல்வது போன்ற செயல்களைநிறுத்திவிட்டு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இந்த மிக சிக்கலான நேரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளையும், நம்பிக்கைகளையும் தகர்க்கும் வகையில்புலிகள் செயல்பட்டு வருவது கவலை தருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 35 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே புலிகளின்அரசியல் எதிரிகள். இது தவிர போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி திரிகோணமலையில் புலிகள் தொடர்ந்துதங்களது படைகளின் முகாமை வைத்துள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இரு தரப்பினரும் நடந்து கொண்டு இனப் பிரச்சனைக்கு உரிய தீர்வைக் காணவேண்டும் என்றார் பில்ப் ரீக்கர்.
பாரிசில் புலிகள் ஆலோசனை:
இதற்கிடையே வட-கிழக்கு இலங்கையில் தங்கள் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது குறித்து அரசுகொடுத்துள்ள திட்டம் குறித்து விவாதிக்க பிரான்சில் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு விடுதலைப் புலிகள்ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் உலகம் முழுவதும் உள்ள புலிகளின் முக்கிய ஆலோசகர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
அடுத்த சில நாட்களில் பாரிசில் நடக்கும் இக் கூட்டத்தில் சர்வதேச சட்ட ஆலோசகர்களும் பங்கேற்க உள்ளதாகஇலங்கை அரசின் அமைதிக் குழுத் தலைவர் ஜி.எல்.பெரிஸ் தெரிவித்தார்.
பாரிஸ் கூட்டத்துக்குப் பின் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் எனவும் அவர் நம்பிக்கைதெரிவித்தார். இலங்கை அரசு- புலிகளுக்கு இடையே அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை தங்கள் நாட்டில்நடத்துமாறு பல நாடுகள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications