விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
லாஸ் ஏன்ஜெல்ஸ்:
விடுதலைப் புலிகள் இயக்குத்துக்கு உதவிகள் செய்வதைத் தடுக்கும் அமெரிக்கச் சட்டத்தை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் அமைப்புகளும், சட்ட அமைப்புகளும் சேர்ந்து தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் அமெரிக்கவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் மற்றும், அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் அட்டர்னிஜெனரல் ஜான் அஷ்கிராப்ட் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களிடம் விசாரணைநடத்தப்படும்.
செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் மீது நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அமெரிக்காவின் தேசப்பற்றுசட்டததில் கடும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்படி அமெரிக்க அரசால் தீவிரவாத அமைப்பாகஅறிவிக்கப்பட்ட இயக்கங்களுக்கு உதவி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும். அதிகபட்சமாக மரணதண்டனையும் வழங்க முடியும்.
இந்தச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கமும், துருக்கியைச் சேர்ந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி என்றஇயக்கமும் தீவிரவாத அமைப்புகளாக அமெரிக்க வெளியுறவுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால்இந்த அமைப்புகளுக்கு உதவி செய்வது சட்டரீதியில் கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து லாஸ் என்ஜெல்ஸைச் சேர்ந்த மனிதாபிமான சட்ட அமைப்பும், நியூயார்க்கைச் சேர்ந்த உலக தமிழ்ஒருங்கிணைப்புக் கமிட்டியும் மேலும் சில அமெரிக்கத் தமிழர் அமைப்புகளும் இணைந்து இந்த வழக்கத்தொடுத்துள்ளன.
அரசியல் சட்ட உரிமைகள் மையம் என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் அரசுக்கு எதிராகவாதாட உள்ளனர்.
லாஸ் ஏன்ஜெல்ஸ் பெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசப்பற்று சட்டத்தால்பொது மனித உரிமைகள், சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே பல வழக்குகள்தாக்கலாகியுள்ளன. இந் நிலையில், அந்த வழக்குகளுடன் சேர்க்கச் சொல்லி இந்த புதிய வழக்கும் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இதற்கான மனுவை தமிழ் அமைப்புகளும் அரசியல் சட்ட உரிமைகள் மைய வழக்கறிஞர்கள்தாக்கல் செய்தனர்.
அதில், விடுதலைப் புலிகள் இயக்கமும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும் தங்கள் மக்களின் பறிக்கப்பட்டஉரிமைகளைத் திரும்பப் பெற போராடி வருகின்றன. இவர்களுக்கு சட்டரீதியிலும் மனிதாபிமானரீதியிலும் உதவிசெய்ய முழு உரிமை உண்டு. இதை தேசப்பற்று சட்டத்தை வைத்து பறிப்பது மனிதாபிமான விரோத செயல் என்றுகூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications