சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு பாதி சம்பளம் கூட கிடைக்காது
சென்னை:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்கு பாதி சம்பளம் கொடுக்க அரசுவிரும்பவில்லை. அவர்களுக்கு தொகப்பூதியமாக ரூ. 4,000 மட்டுமே வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஊழியர்களில் தற்போது 6,032 பேரைத் தவிர மற்ற அனைவரும்பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6,032 பேரில் 2,769 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களாக
கருதுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களாகஅறிவிக்கப்படவுள்ளனர்.
அரசுத்துறையில் சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்கு பாதிச் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்றுவிதிமுறை உள்ளது. மேலும், வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட சகல சலுகைகளும் பாதியளவில் கிடைக்கும்.
ஆனால் இவ்வாறு பாதிச் சம்பளம் கொடுக்க தமிழக அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. சஸ்பெண்ட்செய்யப்பட்டவர்களுக்கு, தாற்காலிக ஊழியர்களுக்குத் தரப்படும் சம்பளமான ரூ. 4,000த்தை மட்டும் கொடுக்கஅரசு முடிவு செய்துள்ளது.
டிஸ்மிஸ் செய்யப்பட்டு இப்போது சஸ்பெண்ட் ஆக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தலைமைச் செயலகஊழியர்கள் தான். இதனால் தலைமைச் செயலகப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, வெளி மாவட்டங்களில்பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் சிலரை தலைமைச் செயலக பணிக்கு மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்குத் தேவையான அரசு உத்தரவு தயாராகி விட்டதாகவும், விரைவில் அது பிறப்பிக்கப்படும் என்றும்தெரிகிறது.
மற்ற அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கும், தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் இடையே நிறையவேறுபாடுகள் உள்ளன. எனவே, அதற்கேற்ற வகையில் தலைமைச் செயலக பணி விதிமுறைகளில் திருத்தம்செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் மொத்தம் 5,116 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 1,978 பேர் ஏற்கனவேசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், 580 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கும் மேற்பட்டஊழியர்கள் தற்போது அங்கு பணியில் இல்லை.
இதனால் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்தே, வெளிமாவட்ட ஊழியர்களை தலைமைச் செயலகப்பணிகளில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications