அந்த 6,072 பேர் யார்?: அச்சத்தில் அரசு ஊழியர்கள்
சென்னை:
வேலை நிறுத்தத்தில் தீவிரம் காட்டிய 6,072 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க இயலாது என தமிழக அரசுகூறியுள்ளது.
இவர்கள் தவிர்த்த 8,063 பேரை மட்டுமே பணியில் சேர்க்க உள்ளது. ஆனால், அந்த 6,072 பேர் யார், யார்?, 8,063பேர் யார், யார் என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
இதனால் தங்களது பெயர் எந்தப் பட்டியலில் உள்ளது என்று தெரியாமல் ஏராளமான ஊழியர்கள் அச்சத்திலும்பெரும் குழப்பத்திலும் உள்ளனர்.
இந்த 6,072 பேர் பட்டியலில் கைதான 2,211 பேரின் பெயர்களும் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் 2,215பேரின் பெயர்களும் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், மற்றவர்கள் யார் என்பது தெரியவில்லை.
டிஸ்மிஸ் ஆன ஊழியர்கள் அனைவருமே நேற்று தங்களது துறை அதிகாரிகளிடம் சென்று மீண்டும் வேலையில்சேர்த்துக் கொள்ளுமாறு கூறினர். ஆனால், மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவில்லை எனக் கூறி அதிகாரிகள்இவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.
டெல்லி சென்றிருந்த பொதுத்துறை செயலாளர் பிச்சாண்டி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைசெயலாளர் மெய் கண்டதேவன் ஆகியோர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் நேற்றிரவு சென்னை திரும்பினர்.
இன்று தலைமை செயலாளர் லட்சுமி பிரானேஷ் சென்னையில் இல்லை. டெல்லியில் நடக்கும் காவிரிகண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். எனவே, இன்று இந்த பிரச்சினை பற்றிஆராய அனைத்து செயலாளர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தான் நடைபெறும்.
செயலாளர்கள் கூட்டம் நடந்து, மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் உத்தரவுகள் அனுப்பப்படவேண்டும். அதன் அடிப்படையில் 8,063 பேர்கள் பட்டியலையும் வெளியிட்டு அவர்களை வேலைக்கு சேர்க்கஅடுத்த வாரம் ஆகிவிடும் என்று தெரிகிறது.
8,063 பேரில் பெரும்பாலானவர்கள் மூன்றாவது நாளாக இன்றும் தங்கள் அலுவலகங்களுக்கு வந்தனர். ஆனால்.அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனால் பலரும் கலங்கிய விழிகளுடன் அலுவலகவளாகங்களிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு மாலையில் திரும்பிச் சென்றனர்.
இன்று முதல்வர் ஜெயலலிதாவும் தலைமைச் செயலாளரும் சென்னை திரும்பிய பிறகு, வேலையில்சேர்க்கப்படவுள்ள 8,063 பேரின் பட்டியல் நாளையே கூட வெளியாக வாய்ப்புள்ளதாக இந்த ஊழியர்களுக்குசில அதிகாரிகள் நம்பிக்கை அளித்து அனுப்பி வைத்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications