அயோத்தி நிலம் தலித்களுக்கு சொந்தமானது: திருமாவளவன்
விழுப்புரம்:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தலித் மக்களுக்குச் சொந்தமான இடம். அதை தங்களுடையது என்று சொல்லஇந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உரிமை இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்என்று இந்துக்கள் கூறுவதும், அங்கு பாபர் மசூதி திரும்பவும் அமைக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம்களும் கூறிவரும் நேரத்தில், அந்த இடத்தில் கோவில் கட்டுவதற்காக சட்டம் கொண்டுவரப்படும் என்று அத்வானிகூறியுள்ளார்.
இவ்வாறு கூறியதன் மூலம் அவர் மீதான நல்லெண்ணம் அறவே போய் விட்டது.
உண்மையில் பார்க்கப் போனால், வரலாற்று அடிப்படையில், சர்ச்சைக்குரிய இடம் புத்த மதத்தினருக்குச்சொந்தமானதாகும். ஆதி காலத்தில் புத்த மதத்தில் இருந்தவர்கள் தலித் மக்கள்தான் என்பதால் அந்த இடம்தலித்களுக்கே சொந்தம்.
பொது சிவில் சட்டம் சமூக அமைதியை சீர்குலைக்கும். முஸ்லீம்களை மட்டுமல்லாது, தலித் போன்ற பூர்வகுடிகளையும் அது பாதிக்கும். அந்த சட்டத்திற்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா கருத்து கூறியுள்ளது தவறுஎன்றார் அவர்.












Click it and Unblock the Notifications