தமிழக பள்ளிகளில் பாட திட்டம் மாற்றம்: ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்சுக்கு முக்கியத்துவம்
சென்னை:
தமிழகத்தில் 7, 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படவுள்ளது. குறிப்பாக 11 மற்றும் 12ம்வகுப்புக்களில் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவிகளும் ஆங்கில பேச்சு, எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளவும், கம்ப்யூட்டர்சயின்ஸ் பயிலவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
காலத்துக்கு ஒத்து வராத பாடங்கள் நீக்கப்பட்டு அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், ஆங்கிலத் திறன், சாப்ட்வேர் போன்றபாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
2004-05ம் கல்வியாண்டில் இந்தப் புதிய பாடத் திட்டம் அமலாக்கப்படும்.
பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, ஊட்டச் சத்து, உணவியல், நர்ஸிங், ஆங்கில பேச்சுத் திறன் ஆகிய பாடங்கள்அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதே நேரத்தில் மொழிப் பாடத்துக்கு இரு தாள்கள் இருப்பதை ஒரு தாளாகக் குறைக்கவும், ஆயுர்வேதம், டிராயிங், எத்திக்ஸ்,இந்திய இசை, தர்க்கவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், சித்தா போன்ற பாடங்களை நீக்கிவிடவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூவில் இனி 5 பிரிவுகள் இருக்கும். அவற்றின் விவரம்:
குரூப் 1:
இதில் குரூப் ஒன் பிரிவை தேர்வு செய்பவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றுடன் விருப்பப்பாடமாக உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியில், பயோ கெமிஸ்ட்ரி, ஆங்கில பேச்சுத் திறன் ஆகிய பாடங்களில் ஏதாவதுஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
குரூப் டூ:
இதில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இவை தவிர விருப்பப் பாடமாக மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, ஆங்கில பேச்சுத் திறன் கல்வி, கம்ப்யூட்டர் சயின்ஸ், உணவியல் ஆகிய பாடங்களில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும்.
குரூப் டூ ஏ:
இந்தப் பிரிவில் சேருபவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள்இருக்கும்.
குரூப் 3:
இதில் தமிழ், ஆங்கிலம், அக்கெளண்டன்சி, எக்கனாமிக்ஸ், வணிகவியல் ஆகியவை கட்டாயப் பாடங்களாகவும், விருப்பப்பாடமாக கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசினஸ் மேத்தமேட்டிக்ஸ், புள்ளியியல், ஆங்கில பேச்சுத் திறன் ஆகிய பாடங்களில் ஒன்றைதேர்வு செய்யவும் வாய்ப்பு தரப்படும்.
குரூப் 4:
இதில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், புவியியல் ஆகியவை கட்டாயப் பாடங்கள். விருப்பப் பாடமாக,பொலிடிக்கல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், ஆங்கில பேச்சு, எழுதும் திறன் ஆகிய பாடங்கள் இருக்கும்.
இதன்மூலம் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூவில் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில பேச்சு-எழுதும் திறனை வளர்க்கவும்கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
முன்பு பிளஸ் ஒன்னில் குரூப் ஒன் பயில்பவர்களுக்கு மட்டுமே கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் இருந்தது. இப்போது எல்லாகுரூப்களிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயில வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications