மேட்டூர் அணையில் நீர் மட்டம் உயர்கிறது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கர்நாடக ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.இந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது.
இது தவிர மேட்டூரின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனாலும் நீர் வந்தவண்ணம் உள்ளது.
நேற்று காலை 32 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 33.04 அடியாக உயர்ந்தது.
வினாடிக்கு 6821 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதுநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம் மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை இந்த நீர் போக்கும்.












Click it and Unblock the Notifications