மும்பை அருகே கடலில் விழுந்தது ஹெலிகாப்டர்: 25 ஓ.என்.ஜி.சி. பொறியாளர்கள் சாவு
மும்பை:
மும்பை அருகே ஹெலிகாப்டர் அரபிக் கடலில் விழுந்தது. இதில் பயணம் செய்த ஓ.என்.ஜி.சி. (Oil and natural gasLTD) பெட்ரோலிய நிறுவனத்தைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இன்னொருவர்மரணமடைந்தார். இவர் தவிர மேலும் 24 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நடுக் கடலில் இந்த விபத்து நடந்தது.
மெஸ்கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது அந்த எம்-172 ரக பயணிகள் ஹெலிகாப்டர்.
இன்று பகல் 12 மணியளவில், கடலுக்குள் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சாகர் கிரண் என்ற எண்ணெய் கிணறில்இருந்து அந்த ஹெலிகாப்டர் கிளம்பியது. அதில் விமானிகள் உள்பட 29 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும்ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மற்றும் என்ஜினியர்கள்.
தங்களது பணி முடிந்து கிளம்பிய என்ஜினியர்கள், அதிகாரிகளுடன் அந்த ஹெலிகாப்டர் மும்பை ஜூகுவில் உள்ளஹெலிபேசுக்கு வந்து கொண்டிருந்தது. 12.15 மணியளவில் அந்த ஹெலிகாப்டர் கடலுக்குள் விழுந்தது.
இதையடுத்து இந்திய கடற்படை ஹெலிகாப்டர்களும், கடலோரக் காவல் படை கப்பல்களுந், ஓ.என்.ஜி.சியின் அதிவிரைவுப் படகுகளும் அந்த இடத்துத்து விரைந்தன. இதுவரை 4 பேரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.அதில் ஒருவர் பின்னர் இறந்தார்.
மற்றவர்களைத் தேடும் பணி நடக்கிறது. ஆனால், இதுவரை அவர்கள் மீட்கப்படவில்லை. இதனால் அந்த 25பேரும் இறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதில் 4 பேர் பைலட்களாவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications