மழை நீர் வடிகால் திட்டத்திற்காக 8 மணி நேர நீச்சல்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
மழை நீர் வடிகால் திட்டத்தை வலியுறுத்தி, திருவாரூரைச் சேர்ந்த இளைஞர் தொடர்ந்து 8 மணி நேரம் நீந்தினார்.
திருவாரூர் மாவட்ட மனித உரிமைக் கழகம், மழை நீர் வடிகால் திட்டத்தைப் பிரபலப்படுத்த முடிவு செய்தது.இதையடுத்து அந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வீர முருகபாண்டியன், தொடர்ந்து 8 மணி நேர நீச்சல்அடிக்க முன்வந்தார்.
திருவாரூர் தியாகராஜர் சன்னதியில் உள்ள கமலாலய திருக்குளத்தில் தொடர்ந்து 8 மணி நேரம் நீந்தினார் வீரமுருகபாண்டியன். இந்த நீச்சல் நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வீர முருகபாண்டியனைஊக்கப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான மக்களுக்கு மழை நீர் வடிகால் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்என்று வீர முருகபாண்டியனும், திருவாரூர் மனித உரிமைக் கழகம் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications