சர்வாதிகாரிகள் பரவாயில்லை போலிருக்கிறது: ஜெ. குறித்து இளங்கோவன்
சென்னை:
தமிழகத்தில் நடந்து வரும் அராஜக அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாகசென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கண்டனப் பொதுக்கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர்கள் கருத்துத்தெரிவித்தனர்.
அதிமுக ஆட்சியைக் கண்டித்தும், எதிர்க் கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்தும் காங்கிரஸ்சார்பில் நேற்று சென்னை சைதாப்பேட்டை தேரடி வீதியில் கண்டனப் பொதுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் வரதராஜன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் பேசுகையில், அடக்கு முறை ஆட்சி செய்து வரும் அதிமுகவை பதவியை விட்டு நீக்கும் காலம் வந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை பழி வாங்குவது, மிரட்டுவது, அச்சுறுத்துவது, அடிப்பது, அதையும் தாண்டி இடிப்பதுஎன இந்த ஆட்சி போய்க் கொண்டுள்ளது.
இந்த ஆட்சியின் சர்வாதிகாரத்தனத்தை தடுத்து நறுத்த வேண்டிய கட்டத்தை அடைந்துவிட்டோம் என்றார்.
இளங்கோவன் பேசுகையில், அந்தக் காலத்து சர்வாதிகாரிகள் பரவாயில்லை என்பது போல ஜெயலலிதாவின்ஆட்சி உள்ளது. இந்த காட்டுத் தர்பார் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். மக்களை மாக்களாக,விலங்குகளாக ஜெயலலிதா நடத்தி வருகிறார். இதற்கு ஒரு நியாயம் கேட்க வேண்டாமா என்றார்.
நல்லகண்ணு பேசுகையில், தவறு செய்கிறீர்கள் என்று சொல்லிப் பார்த்தோம். அவர் கேட்பதாக இல்லை. மாறாகதிருத்தப் பார்க்கும் நம்மையே தீட்டுகிறார் ஜெயலலிதா. எனவே, தானே அழிந்து, நாசமாகிப் போகட்டும் என்றுவிட்டுவிட வேண்டும் என்றார்.
சோ.பாலகிருஷ்ணன் பேசுகையில், திமுக முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்.அது ஒன்றுதான் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி தமிழகத்தில் அமைய தடங்கலாக உள்ளது. கடந்த 2001ம்ஆண்டு தேர்தலின்போது திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும்போது மூப்பனார் மிகுந்த மன வருத்தத்துடன்இருந்தார்.
ஆனால் பா.ஜ.க.வுடன் திமுக கூட்டணி வைத்து விட்ட காரணத்தால் வேறு வழியில்லாமல் தான் விலகினார்என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications