கழிவு நீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 துப்புறவு தொழிலாளர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள மெட்ரோ வாட்டார் பாதாள சாக்கடைக்குள் இறங்கிய 3 பேர் விஷ வாயுதாக்கி பலியானார்கள்.
திருவான்மியூரில் உள்ள மெட்ரோ வாட்டர் கழிவு நீர்த் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் குபேரன், ராஜ்மோகன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருவரும் உள்ளேயிருந்த விஷ வாயு தாக்கி விழுந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவக்குமார்என்பவர், இவர்களைக் காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கினார். அவரும் விஷ வாயு தாக்கி உள்ளே விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் 3பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications