ஈழத் தமிழர்களுக்காக சிறை: நான் செய்தது சிறு தியாகம் தான்- நெடுமாறன்
சென்னை:
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக ஓராண்டுக்கு முன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மீதும் பொடாசிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பழ. நெடுமாறன் (வயது 69), சுப.வீரபாண்டியன் (51), புதுக்கோட்டை பாவாணன் (51), டாக்டர் தாயப்பன் (31),தமிழ் முழக்கம் பதிப்பாளர் சாகுல் ஹமீத் (42) ஆகியோர் மீது பொடா சட்டப் பிரிவுகள் 21(1-ஏ), 21(2-ஏ),21(3),21(4) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பொடா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.
பொடா நீதிமன்ற சிறப்பு நீதிபதி எல். ராஜேந்திரன் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துபழ.நெடுமாறன் அளித்த வாக்குமூல விவரம்:
நான் ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டிய கடமையைத்தான் செய்தேன். அதற்காக சிறை செல்லும் வாய்ப்புகிடைத்தது குறித்துப் பெருமைப்படுகிறேன்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மிஜோராம் ஆகியவற்றில் தடை செய்யப்பட்டஇயக்கங்களின் தலைவர்களுடன் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி ஆகியோர் ஜப்பானிலும்,டெல்லியிலும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்பேச்சுவார்த்தை அதிகாரிகள் மூலம் தொடர்ந்துகொண்டுள்ளன.
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், பிரதமரும், துணைப் பிரதமரும் செய்தசெயலுக்கு பெயர் என்ன?.
ஈழத் தமிழர்கள் எம்மோடு ரத்த உறவு கொண்டவர்கள். சிங்களரின் ரத்த வெறி பிடித்த இனப் படுகொலைக்குஆளாக்கப்பட்டு அவர்கள் துயரக்குரல் எழுப்பும்போது நாங்கள் பார்த்தக்கொண்டு சும்மா இருக்க முடியாது. மனிதநேய உணர்வு கொண்டவர்கள் யாரும் அமைதியாக இருந்திட முடியாது.
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறஇயக்கம். இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் போன்றுபிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தங்கள் மண்ணை மீட்கப் போராடி வருகிறது.
எனவேதான், 51க்கு மேற்பட்ட உலக நாடுகள் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சிங்கள அரசைவற்புறுத்திச் சம்மதிக்க வைத்துள்ளன. இதன் மூலம் ஈழத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக புலிகளை உலக நாடுகள்அங்கீகரித்துள்ளன.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் அறிவுரையை ஏற்க சிங்கள அரசு மறுத்ததால் புலிகளுக்கும் பிறபோராளிகளுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்க இந்திரா அம்மையார் ஏற்பாடு செய்தார்.
ஆனால், பின்னர் காழ்ப்புணர்ச்சியுடனும் உள்நோக்கத்துடனும் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகத் தடைசெய்யப்பட்டது. வங்காள தேச மக்கள் விடுதலைக்காகப் போராடியபோது இந்திய அரசியல் கட்சிகளும் மக்களும்இந்திய ராணுவத்தை அனுப்பி உதவ வேண்டும் என வலியுறுத்தியதை பிரதமர் இந்திரா ஏற்று வங்க விடுதலைக்குஉதவினார்.
அதைப்போல ஈழத் தமிழர்களுக்கு தமிழக, இந்திய அரசுகள் உதவ வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வற்புறுத்திவருகிறோம். ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டிய கடமையை செய்ததற்காக எங்கள் மீது பொடா சட்டம்ஏவப்பட்டுள்ளது.
ஈழத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் வாழ வேண்டிய வயதில் தங்கள் மண்ணை மீட்கத்தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்யும்போது, அவர்களுக்கு ஆதரவாக இந்த வயதில் சிறை செல்லும் சிறுதியாகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது குறித்துப் பெருமைப்படுகிறேன் என்றார் பழ. நெடுமாறன்.
இதையடுத்து வழக்கை நீதிபதி வரும் செப்டம்பர் மாதம் 11ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
வழக்கறிஞர்கள் துணை ஏதும் இன்றி தனது வாதத்தை பழ.நெடுமாறன் மிக நிதானமாகவும் தெளிவாகவும் எடுத்துவைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications