தினமலர் நாளிதழ்கள் எரிப்பு: திமுகவினர் கைது
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் இடிக்கப்படுமா என்றுதினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையின் பல்வேறு இடங்களில் திமுகஇளைஞர் அணியினர் அந்த நாளிதழை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்து இடிக்கப் படப் போவது என்ன என்ற செய்தியை, அடுத்தஇடி? என்ற தலைப்பில் இன்றைய தினமலர் நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதில் அண்ணா மற்றும்எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் இடிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து திமுக இளைஞர் அணியினர் இன்று சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் தினமலருக்கு எதிராகபோராட்டம் நடத்தினர். சைதாப்பேட்டை பகுதியில் கவுன்சிலர் சுப்பிரமணியம் தலைமையில் திரண்ட நூற்றுக்கும்மேற்பட்ட திமுகவினர் அந்த நாளிதழை எரிக்க முயன்றனர்.
அப்போது குறுக்கிட்ட போலீஸார் 150க்கும் மேற்பட்ட திமுகவினரைக் கைது செய்து
சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு வைத்தே அந்த நாளிதழ் பிரதிகளைஅவர்கள் எரித்தனர்.
இதேபோல, தி.நகரில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் ஊர்வலமாக சென்று மாம்பலம் காவல் நிலையம் முன் அந்தநாளிதழ்களை எரித்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சேப்பாக்கம் தொகுதி திமுக இளைஞர் அணியினர் அண்ணா சாலையில் உள்ள தினமலர் அலுவலகம் அருகேஸ்பென்சர் சந்திப்பில் தினமலர் நாளிதழ்களை எரித்தனர். இதேபோல, ராயப்பேட்டை, அண்ணாநகர் ஆகியபகுதிகளிலும் அந்த நாளிதழ்கள் எரிக்கப்பட்டன.
அழகிரி விடுதலை:
இதற்கிடையே திருச்சி சிறையில் இருந்து அழகிரி இன்று ஜாமீனில் வெளியே விடப்பட்டார்.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைதான அழகிரிக்கு சென்னை உயர் நீதிமன்றம்நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 5.30 மணியளவில் அழகிரி விடுவிக்கப்பட்டார்.
அவரை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாள், முன்னாள் அமைச்சர்கள்பொன்முடி, நேரு, மதுரை மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினர் சிறை வாசலில் நின்று வரவேற்றனர்.
இதன் பின்னர் அவர் பெங்களூர் புறப்பட்டார். அங்கு தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திடவேண்டும் என அழகிரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications