ட்யூஷன் படிக்க மறுத்த மாணவிகளுக்கு பிரம்படி
சென்னை:
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளை டியூஷன் படிக்கச் சொல்லி பள்ளி ஆசிரியை துன்புறுத்துவதாகவும்,அதுதொடர்பாக புகார் கூறச் சென்றால் தலைமை ஆசிரியை அடிப்பதாகவும் மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளி. இங்கு வேதியியல் ஆசிரியையாகஇருப்பவர் சீதாலட்சுமி. இவர் தனது வகுப்பில் சரியாக பாடம் நடத்துவதில்லை என்று கூறப்படுகிறது. அத்தோடு,தனது வீட்டிற்கு வந்து டியூஷன் படித்தாக வேண்டும் என்று மாணவிகளை கட்டாயப்படுத்துவதாகவும்கூறப்படுகிறது.
இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் புகார் கொடுத்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும்எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் 20 மாணவிகள்வேதியியல் பாடத்தில் தோல்வியுற்றனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 20 மாணவிகளையும் தலைமை ஆசிரியை வெயிலில் நிற்க வைத்தும், பிரம்பால்அடித்தும் உள்ளார். இதில் சில மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து தங்களதுபெற்றோரிடம் மாணவிகள் கூறவே, அனைவரும் பள்ளிக்குத் திரண்டு வந்தனர். தலைமை ஆசிரியை அறையைமுற்றுகையிட்ட அவர்கள் தலைமை ஆசிரியையை மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications