ஜனனியின் ரூ. 1.4 கோடி பணத்தை வங்கியில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை:
நடராஜனுக்கு நெருக்கமான மதுரைப் பெண் ஜனனியின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ரூ.1.40 கோடி பணத்தைவங்கியில் இருப்பு வைக்க காவல்துறைக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணம் இதுவரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணம் எப்படி வந்தது, அதற்கு வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதால்அதைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி மதுரை வருமான வரித்துறை போதைப்பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் மனு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், பணத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து பெரிய டிரங்க் பெட்டியில் பலத்த பாதுகாப்புடன் இந்தப் பணம் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
அங்கு நீதிபதி முன்னிலையில், பணத்தை வருமான வரித்துறை துணை ஆணையர் பழனிவேல்ராஜன் எண்ணினார்.பின்னர். நோட்டுக்களின் எண்களை குறித்துக் கொண்டார்.
அதன் பின்னர் பணத்தை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 3 மாதத்திற்கு இருப்புவைக்குமாறு நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார்.
ஜனனியின் காரும், நகைகளும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா கடத்தி இந்தப் பணத்தை ஜனனி சம்பாதித்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்தப் பணம்நடராஜன் மூலம் ஜனனிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications