முன்னாள் அதிமுக அமைச்சர், திமுக மாஜி அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளில் போலீஸ் ரெய்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக முன்னாள் அமைச்சர்கள் 3 பேரின் வீடுகளிலும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்த கோமதிசீனிவாசனின் வீட்டிலும், தாமரைக்கனியின் வீட்டிலும், திமுக ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்களின்வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

மாநிலம் முழுவதும் சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில் இன்று அதிரடி ரெய்ட் நடந்தது.

திமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்த என்.கே.கே. பெரியசாமி, முன்னாள் பால்வளத்துறைஅமைச்சர் பொன்னேரி சுந்தரம், முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் கு.பிச்சாண்டி ஆகியோரின வீடுகளில்சோதனைகள் நடந்தன.

அவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது அந்ததத் துறைகளில் மூத்த அதிகாரிகளாக இருந்தவர்களின் வீடுகளிலும்சோதனை நடந்தது.

அதே போல எம்.ஜி.ஆரின் ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து, இப்போது பா.ஜ.கவில் இருக்கும்கோமதி சீனிவாசனின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இவர் திமுக எம்.எல்.ஏவாகவும் இருந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் பா.ஜ.கவில் சேர்ந்தார்.

அதே போல ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சர் இன்பத் தமிழனின் தந்தையுமானதாமரைக்கனியின் வீட்டிலும் ரெய்ட் நடந்தது. தாமரைக்கனி இப்போது திமுகவில் உள்ளார்.

பிச்சாண்டியின் திருவண்ணாமலை செங்கம் ரோடு வீட்டிற்கு காலையில் போலீஸ் படை வந்தபோது அவர்சென்னையில் இருந்தார். அவரது மனைவி தேனருவியும் மகன், மகள்கள் வீட்டில் இருந்தனர். லஞ்ச ஒழிப்புப்போலீஸ் பிரிவு டி.எஸ்.பி. சுதாகர் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜேக்கப் மாணிக்கராஜ் உள்ளிட்ட 15 பேர்கொண்ட போலீஸ் படை சோதனையில் இறங்கியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பிச்சாண்டி திருவண்ணாமலைக்கு விரைந்தார். சில உறவினர்களின் வீடுகளிலும்சோதனை நடந்தது.

அதே போல சென்னை மீஞ்சூர் அருகே பாலாஜி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் பொன்னேரி சுந்தரத்தின்வீட்டிலும் ரெய்ட் நடந்தது. டி.எஸ்.பி. ஷாஜகான் தலைமையிலான 18 பேர் கொண்ட போலீஸ் படை இந்தச்சோதனையை நடத்தியது. அதே நேரத்தில் திருவெற்றியூரில் உள்ள அவரது மாமனார் சண்முகம், மைத்துனர்கதிரவன், நண்ர் சந்திரசேகர் ஆகியோரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

அதே போல ஈரோடு மாவட்ட ஆப்பக்கூடலில் உள்ள என்.கே.கே. பெரியசாமியின் வீட்டிலும், அவரது மகனும்ஈரோடு மாவட்ட திமுக செயலாளருமான ராஜாவின் வீட்டிலும் காலை 7.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புப் போலீசார்வந்திறங்கினர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சித் தலைவரான தாமரைக்கனியின் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிங்கம்மாள்புரம் வீட்டிலும்சோதனை நடந்தது. மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பிக்கள்தலைமையிலான பெரும் படையும் பொதுப் பணித்துறையினரும் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

அவருக்குச் சொந்தமான ஐஸ் கம்பெனியிலும் சோதனை நடந்தது.

அதே போல திமுக ஆட்சியில் அதிகாரிகளாக இருந்த பலரின் வீடுகளிலும் சோதனைகள் நடந்து வருவதாக லஞ்சஒழிப்புப் போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் விவரத்தை இன்றிரவு அவர்கள் வெளியிடுவர்.

இன்று காலை 7.30 மணிக்கு இச் சோதனைகள் தொடங்கி தொடர்ந்து நடந்தன.

அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, துரை முருகன், சமயநல்லூர் செல்வராஜ், அந்தியூர்செல்வராஜ், ஜெனிபர் சந்திரன், ஆற்காடு வீராசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரின் வீடுகள்மற்றும் நிறுவனங்களில் பலமுறை லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+