தமிழகம் முழுவதும் சிலைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு திட்டம்
சென்னை:
கண்ணகி சிலை, சீரணி அரங்கம் என தலைமைச் செயலகம் செல்லும் வழியில் உள்ள கட்டடங்களைத் தொடர்ந்துதமிழகம் முழுவதும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின்சிலைகளை அகற்றவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் சொல்லித் தான் கடலோரத்தில் உள்ள சின்னங்கள்அகற்றப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளசிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கும் போலீஸாருக்கும் ரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகள், புறம்போக்கு நிலங்களில் உள்ள சிலைகள், எந்த ஆண்டு,யாரால் வைக்கப்பட்டது போன்ற விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்குமாறு அந்த உத்தரவில்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விவரங்களை சேகரிக்கும் பணியில் உளவுப் பிரிவு போலீசாரை அந்தந்த மாவட்டநிர்வாகங்கள் இறக்கிவிட்டுள்ளன.
மேலும் கடந்த 25 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரி, குளங்கள், அரசுக்குச் சொந்தமான இடங்கள்,அதை ஆக்கிரமித்தவர்கள் விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கச் சொல்லிபரிந்துரைத்த அரசியல்வாதி யார், பட்டா வழங்கிய தாசில்தார் யார் என்ற விவரமும் சேகரிக்கப்படுகிறது.
அந்த தாசில்தார் ஓய்வு பெற்றிருந்தால் அவரது நிரந்தர வீட்டு முகவரி எது என்ற விவரத்தையும் சேகரிக்குமாறுஉத்தரவிடப்பட்டுள்ளது.
மழை நீர் சேகரிப்பில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ள அரசு ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்அடுத்து இறங்கும் என்று தெரிகிறது.
உரிய அனுமதி இல்லாமல் அரசு நிலத்தில் வைக்கப்பட்டுள்ளசிலைகள், நினைவு கல்வெட்டுக்கள், தூண்கள்,கொடிக் கம்பங்கள் அகற்றப்படலாம் என்று தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications