முற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு: கருணாநிதி, ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சென்னை:
பொருளாதாரரீதியில் பின் தங்கிய முற்பட்ட சமூதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் பா.ஜ.கவின்யோசனைக்கு திமுக, பா.ம.க. ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
முற்பட்ட சமூகத்தினரில் உள்ள பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்துஆராய துணைப் பிரதமர் அத்வானி தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமூகரீதியில் பின் தங்கியவர்களும் பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களும் ஒன்றல்ல. இதை முன்னாள்பிரதமர் நேருவே தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக கீழ் ஜாதி என்றபெயரால் ஒடுக்கப்பட்ட இனத்தினரை சமூகரீதியில் முன்னே கொண்டு வரத்தான் இட ஒதுக்கீடு உள்ளது.இதில்எப்படி முற்பட்ட வகுப்பினரையும் சேர்க்க முடியும்?.
சரியாகச் சொன்னால் எல்லா ஜாதிகளையும் முறையாகக் கணக்கிட்டு, எத்தனை பேர் ஒவ்வொரு ஜாதியிலும்உள்ளனர் என்று பார்த்து அதறிகேற்பவே இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில்,
சமூக அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது தான் எங்கள் நிலை, கொள்கை. பெரியார், அண்ணாகாலத்தில் இதற்கான அரசியல் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் முன்னேறியசமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளியவர்களுக்கு புதிதாக சட்டம் கொண்டு வந்தோம்.
பட்டதாரி இல்லாமல் இருக்கும் முற்பட்டோர் குடும்பத்தினரில் யாராவது தொழிற் பட்டப் படிப்பில் முதலிடம்பிடித்தால் கூடுதலாக 5 மதிப்பெண் தரப்படும் என்று அறிவித்தேன். இதன் மூலம் அவர்கள் உயர் கல்வியில் சேரவாய்ப்பை அதிகரித்தோம். இதனால் ஒரே ஆண்டில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலனடைந்தன.
ஆனால், அடுத்த ஆண்டே நீதிமன்றத்தில் இத் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசுக்குஉண்மையிலேயே அக்கறை இருந்தால் நாங்கள் கொண்டு வந்த அந்தத் திட்டத்தை யோசித்துப் பார்த்து அமலாக்கவேண்டும்.
அதே போல பசுவதை என்பதும், அதைத் தடுக்க சட்டம் கொண்டு வருவதும் இப்போது தேவையே இல்லாதபிரச்சனை என்றார் கருணாநிதி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications