தலைமைச் செயலகத்தில் தலைகீழ் மாற்றம்: பரிந்துரைக்க குழுவை நியமித்தார் ஜெ.
சென்னை:
தலைமைச் செயலக ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்கவுள்ளது.
தலைமைச் செயலகத்தையே மாற்றி அமைக்கும் வகையில் பரிந்துரைகள் செய்ய 4 பேர் கொண்ட குழுவைமுதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இந்தக் குழு 15 நாட்களில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும்.
தமிழக அரசு ஊழியர்களாகவே இருந்தாலும், தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பல தனிச் சலுகைகள் இருந்துவந்தன. இந்தச் சலுகைகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தலைமைச் செயலக ஊழியர்கள் நிரந்தரமாக சென்னையிலேயே பணி புரியவும், வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்ய்படாமலும் இருக்க சலுகைகள் இருந்து வருகின்றன. இந்தச் சலுகையை தூக்கி எறிந்துவிட்டுஇவர்களையும் பிற அரசு ஊழியர்களைப் போலவே நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கோப்புகளை தேங்க விடுவது, பணி நேரத்தில் வெட்டிப் பொழுதைப் போக்குவது போன்றவற்றை நீக்கி தலைமைச்செயலகத்தை நவீனமாக்கவும் இந்தக் குழு அரசுக்கு பரிந்துரை செய்யும்.
மேலும் தலைமைச் செயலகத்தில் அதிக அளவில் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தவும், கோப்புகளை மிகவிரைவாக சரி பார்க்கவும், அளவுக்கு அதிகமான ஊழியர்களை பணியை விட்டுத் தூக்குவது குறித்தும்ஆராயுமாறு இந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல ஊழியர்களின் செயல்பாட்டை வைத்து ஊதிய உயர்வு வழங்குவது, அநாவசியமான விடுமுறைநாட்களை ரத்து செய்வது, பணியாளர்கள் குறித்த ரகசிய அறிக்கைகளைப் பராமரிப்பது போன்வற்றையும்அமலாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விஷயங்கள தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் உள்துறைச் செயலாளர்சையத் முனீர் ஹோதா, பணியாளர் சீர்திருத்தத்துறைச் செயலாளர் மெய்கண்டதேவன், பொதுத்துறைச் செயலாளர்பிச்சாண்டி, நிதித்துறை சிறப்புச் செயலாளரக் கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை அடக்கி ஒடுக்கியதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும்உறுதுணையாக இருந்தவர்கள் மெய்கண்ட தேவனும் பிச்சாண்டியும். இவர்கள் அரசிடம் தரவுள்ள பரிந்துரைகள்மிகக் கடுமையானதாவே இருக்கும் என்ற பயம் இப்போதே தலைமைச் செயலக ஊழியர்களைப் பற்றிக்கொண்டுவிட்டது.
இந்தக் குழுவை கடந்த 8ம் தேதியே முதல்வர் ஜெயலலிதா நியமித்துவிட்டார். ஆனால், இப்போது தான் இந்தத்தகவலை அரசு வெளியில் கூறியுள்ளது. வரும் 22ம் தேதி தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இக் குழுஜெயலலிதாவிடம் அளிக்கும்.
இதன் பின்னர் தலைமைச் செயலகமே அதிரடியாக மாற்றி அமைக்கப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications