கருணாநிதி, இளங்கோவன் மீது பாய்ந்தது எஸ்மா: கைதாக வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தூண்டும் வகையில் பேட்டிகள் கொடுத்ததாகவும், அறிக்கைகள்விடுத்ததாகவும் கூறி திமுக தலைவர் கருணாநதி, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு ஆகியோர்மீது எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டத்தின் கீழ் தமிழக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடந்தது. இதையடுத்து அவர்கள் மீது எஸ்மா மற்றும்திருத்தப்பட்ட எஸ்மா சட்டமான டெஸ்மா ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, இளங்கோவன், நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீது டெஸ்மாசட்டத்தின் 5-வது பிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுத் துறைச் செயலாளர் பிச்சாண்டியின் உத்தரவின் பேரில், குற்றப் பிரிவு போலீஸார் இந்த வழக்கைப் பதிவுசெய்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தூண்டும் வகையிலும் பேசியதாகவும்,அறிக்கைகள் விட்டதாகவும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின் நகல்கள் சென்னை கூடுதல் மெட்ரோபாலிடன் விடுறை கால நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன.

டெஸ்மா சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படுவோருக்கு, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனைஅல்லது ரூ. 5,000 அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கருணாநிதி உள்ளிட்டவரகளை இந்தச் சட்டத்தின் கீழ் மாநில அரசு கைது செய்யவும் வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+