வழக்கை சந்திக்க தயார்: இளங்கோவன், நல்லகண்ணு அறிவிப்பு
சென்னை:
தங்கள் மீது தொடரப்பட்டுள்ள டெஸ்மா வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்று காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தன் மீது தொடரப்பட்டுள்ள டெஸ்மா வழக்கு குறித்து இளங்கோவன் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுவழக்குத் தொடருவது ஒன்றும் இந்த அரசுக்குப் புதிதல்ல. என்னைப் பொறுத்தவரை இது மேலும் ஒரு வழக்கு.அவ்வளவு தான். இதை சட்டரீதியாக சந்திப்பேன் என்றார்.
நல்லகண்ணு கூறுகையில், இது அரசின் பழிவாங்குதல் நடவடிக்கையையே காட்டுகிறது. அரசு ஊழியர்களின்நியாயமான கோரிக்கைகளை நாங்கள் ஆதரித்தோம். அவர்களை ஸ்டிரைக் செய்யுங்கள் என்று நாங்கள்தூண்டினோமா? என்றார்.
வரதராஜன் கூறுகையில், அரசு ஊழியர்கள் போராட்டத்தை தூண்டியது நாங்கள் அல்ல. அவர்களின் நியாயமானகோரிக்கைகள்தான் போராடத் தூண்டியது. அவர்களது நியாயமான போராட்டத்தை நாங்கள் ஆதரித்தோம்,தொடர்ந்தும் ஆதரிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications