ராமதாஸ், சிதம்பரம், வாசன், சங்கரய்யா கண்டனம்
சென்னை:
கருணாநிதி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருணாநிதி, இளங்கோவன், நல்லகண்ணு, வரதராஜன் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஜனநாயகக்கடமையைத்தான் ஆற்றியுள்ளனர். அவர்கள் மீது இதுபோல வழக்குப் பதிவு செய்துள்ளது, இதுவரைகேள்விப்படாத விஷயமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், அரசின் வழக்கு முலம்,உழைக்கும் மக்களுக்காக செயல்படும் உண்மையான தலைவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அதற்காகஜெயலலிதாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஜனநாயகப் போக்குஅல்ல. அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. அதைத்தான் இவர்கள் செய்துள்ளனர்.ஜனநாயக நாட்டில், எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும், எதிர் கொள்ளும் பக்குவம்ஆளுங்கட்சிக்கும், அரசுக்கும் இருக்க வேண்டும். இந்த வழக்கு தவறான முன்னோடியாக அமைந்து விடும் என்றுகூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா விடுத்துள்ள அறிக்கையில், இதுபோன்ற அடாவடி சட்டங்கள்மூலம் எதிர்க் கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைத்தால் அதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம், எஸ்மா சட்டத்தைமுதல்வர் ஜெயலலிதா மாநில அரசு ஊழியர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், எதிர்க் கட்சிகளுக்கும் எதிராகவும்அமாலக்கியுள்ளார். ஜெயலலிதாவின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் கொந்தளித்து எழ வேண்டும்.
விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துத் தான் ரேசன் அரிசி விலையைக் குறைப்பதாகசுதந்திர தின உரையில் ஜெயலலிதா கூறியுள்ளார். முதலில் பா.ஜ.க. கூட்டணியைவிட்டு திமுக, மதிமுக, பா.ம.க.வெளியேறிவிட்டு அதிமுகவுக்கு எதிராக போராட ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications