இளங்கோவனுக்கு பா.ஜ.க. கறுப்பு கொடி: பதிலுக்கு காங்கிரஸார் செருப்பு வீச்சு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், தலைவர் சோ.பா,மேலிடப் பார்வையாளர் சத்யஜித் கெய்க்வாட் ஆகியோருக்கு பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி காட்டினர். இதைஎதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள், பா.ஜ.க.வினர் மீது செருப்பு வீசினர். இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றம்ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழாவையொட்டி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்கலந்து கொள்வதற்காக சோ.பா, இளங்கோவன், கெய்க்வாட் ஆகியோர் கார்களில் ராமநாதபுரம் வந்தனர்.
அவர்களது வருகையை எதிர்த்து பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் பா.ஜ.கவினர் துரை கண்ணன்என்பவரது தலைமையில்கருப்புக் கொடி காட்டினர். இவர்களை போலீஸார் தடுக்கவில்லை. மாறாக பாதுகாப்பாகநின்றிருந்தனர்.
இதைப் பார்த்து ஆவேசமடைந்த, கார் ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த சில காங்கிரஸார், பா.ஜ.கவினர் மீதுசெருப்புகளை வீசினர். இதையடுத்து பா.ஜ.கவினர் காங்கிரஸ் தலைவர்கள் சென்ற கார்கள் மீது கற்களை வீச,பதிலுக்கு காங்கிரசாரும் கல் வீசினர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர்.
உடனே அங்கு விரைந்த மாவட்ட காவல்துறைக் கண்காணிபபாளர் அசோக் குமார் தாஸ், டி.எஸ்.பி தாமோதரன்ஆகியோர் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications