மெரீனா இடிப்பு தொடர்கிறது .. மேலும் 2 கட்டடங்கள் "டமால்"
சென்னை:
மெரீனா கடற்கரையில் உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்படுவது தொடர்கிறது. முதலில் சீரணி அரங்கம்இடிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 2 கட்டடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த வரலாற்றுப் புகழ் வாயந்த சீரணி அரங்கம் திடீரென்று கடந்த வாரம்இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு தற்போது வெறும் மணல்தான் உள்ளது.
சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில்மெரீனா கடற்கரையில் இருந்த மேலும் 2 பழைய கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன.
அண்ணா நீச்சல்குள வளாகத்தில் உள்ள பழைய கட்டடம் நேற்று இரவு இடித்துத் தள்ளப்பட்டது. அங்குள்ள உடைமாற்றும் அறை உள்ளிட்ட சில அறைகள் இடித்துத் தள்ளப்பட்டன. அதேபோல, மாநிலக் கல்லூரிக்கு எதிரேஇருந்த பழைய புகாரி ஹோட்டல் கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இவை இரண்டும் இடித்துத் தள்ளப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் அபூர்வா கூறுகையில், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. மெரீனாகடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு கட்டடங்களும் பாழடைந்த நிலையில் இருந்தன. எனவே அவற்றை இடித்துத் தள்ளி விட்டோம்.இரண்டுமே மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள். இரவில் இடித்துத் தள்ளியதற்கு விசேஷ காரணம் எதுவும்இல்லை.
பகலில் இந்தப் பணிகள் நடந்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும், எனவேதான் இரவில் இடிக்கிறோம்என்றார் அவர்.
மெரீனா கடற்கரையில் தொடர்ந்து பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவது சென்னை மக்களிடையேபல்வேறு கேள்விக் குறிகளை எழுப்பியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications