மேட்டூர் அணைக்கு தொடர்கிறது நீர் வரத்து
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து கூடி வருகிறது. நீர் மட்டம் 41 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்திலும்மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து திருப்திகரமாக இருந்து வருகிறது. இதனால்அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 5,289 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
தண்ணீர் வரத்து திருப்திகரமாக இருந்தாலும் கூட, விவசாயத்திற்குத் திறந்து விடும் அளவுக்கு இந்த நீர்போதுமானதாக இருக்காது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications