அரசு மருத்துவமனைகளில் போலீசார் ரெய்டு: லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் கைது
மதுரை:
மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசுமருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கிவருகின்றனர்.
ஸ்டெரச்சரைத் தள்ள காசு, பெட்டில் புதிய படுக்கை விரிக்க காசு, நோயாளிகளுக்கு உணவு தர காசு என அரசுமருத்துவமனைகளில் கீழ் நிலை ஊழியர்களின் தொல்லை சொல்லி மாளாதது. இது தவிர பிரசவ வார்டில் ஆண்குழந்தை பிறந்தால் இவ்வளவு, பெண் குழந்தை பிறந்தால் இவ்வளவு தர வேண்டும் என நர்ஸ்கள் ரேட் கார்டேவைத்துள்ளனர்.
இந் நிலையில் அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனைகளில் இறங்கியுள்ளனர்.
மதுரை:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டி.எஸ்.பி. தலைமையிலான போலீஸார் லுங்கி கட்டிக் கொண்டுநோயாளிகள் போலச் சென்று சோதனை நிடத்தினர். அதேபோல, பெண் போலீஸாரும் சேலையில் வந்திருந்தனர்.மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாறு வேடத்தில் இருந்த போலீஸார் சென்று வேவுபார்த்தனர்.
மாறு வேடத்தில் இருந்த பெண் போலீஸார் இருவரிடமும் ரூ. 100 லஞ்சம் கொடுக்குமாறு கேட்ட மகப்பேறுபிரிவில் பணியாற்றும் பாத்திமா மற்றும் பாண்டியம்மாள் என்ற இரு நர்சுகளை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி:
அதேபோல, திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு தலைமை மருத்துவமனையிலும் சோதனைநடத்தப்பட்டது. மேலும் அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையின்போது லஞ்சம்கேட்ட 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடக்கும் செய்தி அறிந்ததும் பல ஊழியர்கள் வாங்கிய காசைக் கூட தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்துஓடிவிட்டனர். இன்னொரு ஊழியர் தனது அறையை பூட்டிவிட்டுத் தப்பினார்.
திருநெல்வேலி:
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையின்போது மருந்தகதத்தில் ரூ. 10,000 மதிப்புள்ளமருந்துகள் காணவில்லை என்பது தெரியவந்தது. இதை வெளியே மெடிக்கல் ஷாப்களுக்கு மருந்தக ஊழியர்கள்குறைந்த விலைக்கு விற்றுவிட்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் வாங்கியதாக யாரும் இங்குபிடிபடவில்லை. இருப்பினும், ஊழியர்கள், நர்சுகள் தங்களை சரியாக கவனிப்பதில்லை என்றும் மிகக் கேவலமாகநடத்துவதாகவும் போலீசாரிடம் நோயாளிகள் புலம்பினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையின்போது ஒரு நோயாளியிடம் பத்து ரூபாய் லஞ்சம்வாங்கிய தாந்தோணி என்ற ஊழியர் பிடிபட்டார்.
மகப்பேறு வார்டுக்குள் நுழைந்த போலீசார் அறையை மூடிவிட்டு உள்ளே இருந்த ஊழியர்களிடம் சோதனைநடத்தினர். அப்போது பாப்பாத்தி அம்மாள் என்ற ஆயாவிடமிருந்த கைப்பையில் கணக்கில் வராத ரூ. 920 பணம்இருந்தது தெரிய வந்தது. இவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையின்போது லஞ்சம் வாங்கியதாக 4 ஊழியர்கள்பிடிபட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் மீது அரசின் பார்வை திரும்பியுள்ளதாகத்தெரிகிறது. இது ஒரு மிக நல்ல நடவடிக்கையே என்பதில் இரு வேறு கருத்துக்களே இருக்க முடியாது.












Click it and Unblock the Notifications