தீவிரவாதி அறிவழகன் கைது: வீரப்பனுக்கு ஏ.கே-47 கொடுத்தவர்
பெரம்பலூர்:
தமிழர் விடுதலை இயக்க பொதுச் செயலாளர் அறிவழகன் பெரம்பலூர் மாவட்டம் அரியலூல் கைதுசெய்யப்பட்டார்.
தமிழர் விடுதலை இயக்கத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பைச் சேர்ந்தநிர்வாகிகளை போலீஸார் வலை வீசித் தேடி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்தலைமறைவாகிவிட்டனர்.
இந் நிலையில் அரியலூர் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தைப்போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதில் இருந்தவர் போலீஸாரைக் கண்டதும், தன்னிடமிருந்த வெடிகுண்டுகளைக்காட்டி தன்னை பிடிக்க முயன்றால் வெடிகுண்டு வீசுவேன் என மிரட்டினார். இருப்பினும் போலீஸார் அவரைவளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலை இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் அறிவழகன்என்று தெரியவந்தது.
இவர் மீது தஞ்சை, கடலூர், பெரம்பலூர் ஆகிய நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. சந்தனக் கடத்தல்வீரப்பனுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிக் கொடுத்ததாகவும் இவர் மீது புகார் உள்ளது.
அறிவழகன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications