சினிமாவில் அசிங்கமான பாட்டுகள் வேண்டாம்: பெண்கள் அமைப்பு கோரிக்கை
சென்னை:
சினிமா படங்களில் இரட்டை அர்த்தம் பொதிந்த, அசிங்கமான வார்த்தைகள் கொண்ட, அருவருக்கத்தக்கபாடல்களை எழுத வேண்டாம் என்று வைரமுத்து உள்ளிட்ட பாடலாசிரியர்களுக்கும், இதுபோன்ற காட்சிகளில்நடிக்க வேண்டாம் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலமாக தமிழ் சினிமாக்களின் பாடல் வரிகள் பெண்களால் கேட்க முடியாத அளவுக்கு அசிங்கமாகஉள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் பெண்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வார்த்தைகளாலும்வர்ணிப்பதும், யாருக்குமே புரியாத வார்த்தைகளும் அடங்கியதாக தமிழ் சினிமாப் பாடல்கள் உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
மேலும், உதித் நாராயண் போன்றவர்கள் பாடும்போது வார்த்தைக் கொலைகளுக்கும் பஞ்சமே இல்லை.
இந் நிலையில் தமிழ் சினிமாவில் இனிமேல் ஆபாசமான பாடல்களை எழுத வேண்டாம் என்று கோரி பிரபலபாடலாசியர் வைரத்து உள்ளிட்ட தமிழ் சினிமா பாடலாசியர்களுக்கும், இதுபோன்ற பாடல் வரிகளுக்கு பாடி, ஆடநடிக்க வேண்டாம் என்று விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடிதம்எழுதியுள்ளது.
இந்தக் கடிதங்களில், இளைஞர்களை மிகவும் பாதிக்கும் வகையில் பாடல் வகள் உள்ளன. இரட்டை அர்த்தம்பொதிந்த பாடல் வரிகள், மீண்டும் மீண்டும் டிவி, ரேடியோக்களில் போடப்படும்போது, பெண்களை கேலிசெய்வதும், கொச்சையாக விமர்சிப்பதும் தங்களது வாழ்க்கை லட்சியம் போல இளைஞர்கள எடுத்துக்கொள்கிறார்கள்.
மேலும் பாலியல் வன்முறைகளுக்கும் இது வித்திடுகிறது.
எனவே பாடலாசியர்களும், நடிகர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். நல்லவிஷயங்களை பாடல்களில் சொல்ல வேண்டும். ஈவ் டீசிங் குறித்தும் அதை ஒழிப்பது குறித்தும் பாடல்களில்எழுதலாம், அதுகுறித்து படங்களில் காட்சிகள் வைக்கலாம் என அந்தக் கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.
சினிமாப் பாடல்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த ஆய்வையும் கடிதத்துடன் மாதர்சங்கம் இணைத்துள்ளதாக அதன் தலைவி வாசுகி தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications