தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து: பிரதமருடன் தமிழஞர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி பிரதமர் வாஜ்பாயை தமிழ் அறிஞர்கள் நேரில் சந்தித்து மனுகொடுத்தனர்.
நேற்று இந்த அறிஞர்கள் நாடாளுமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருந்தனர். திமுக சார்பில் செ.குப்புசாமிஎம்.பியும், காங்கிரஸ் சார்பில் குமரி அனந்தனும் இதில் பங்கேற்றனர். கடைசி நேரத்தில் இந்தப் போராட்டத்தில்இருந்து பா.ஜ.க. விலகிக் கொண்டது.
இந் நிலையில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தமிழ் அறிஞர்களை அழைத்துக் கொண்டு பிரதமரிடம் சென்றார்.அப்போது அவர்கள் பிரதமரிடம் மனு கொடுத்தனர்.
இது குறித்துப் பரிசீலிப்பதாக வாஜ்பாய் உறுதி மொழி தந்ததாக தமிழறிஞர் வா.மு.சேதுராமன் நிருபர்களிடம்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications